புதுடெல்லி,
கேரளாவில் 1992-ம் ஆண்டு அபயா என்ற கன்னியாஸ்திரி கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார். இவரது சாவு தொடர்பான குற்ற வழக்கில் மற்றொரு கன்னியாஸ்திரியான செபி என்பவர் கைது செய்யப்பட்டார்.
இவரை 2008-ம் ஆண்டு வலுக்கட்டாயமாக கன்னித்தன்மை பரிசோதனைக்கு சி.பி.ஐ. உட்படுத்தியதாகத் தெரிகிறது. இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் கன்னியாஸ்திரி செபி முறையிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவர்ண காந்த சர்மா நேற்று தீர்ப்பு அளித்தார். அந்தத் தீர்ப்பில் “ஒரு பெண் கைதியை கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்துவது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது, அரசியல் சாசனத்தின் பிரிவு 21-ஐ மீறிய செயல்” என கூறப்பட்டுள்ளது.
Related Tags :