திருச்சி: கடந்த அதிமுக ஆட்சியில் மூடப்பட்ட மணப்பாறை உழவர் சந்தை. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மீண்டும் புது பொலிவுடன் திறக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் நோக்கில் கடந்த 2000 மாவது ஆண்டில் தமிழ்நாட்டின் 93வது உழவர் சந்தை திறக்கப்பட்டது. அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் உழவர் சந்தை பராமரிப்பின்றி மூடப்பட்டது.
நீண்டகாலமாக மூடப்பட்டிருந்த உழவர் சந்தையை புனரமைத்து மீண்டும் திறக்க வேண்டும் என்று மணப்பாறை பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து புது பொலிவுடன் உழவர் சந்தை மீண்டும் திறக்கபட்டது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரிப்பன் வெட்டி உழவர் சந்தையை திறந்து வைத்தார். பின்னர் கடைகளை ஆய்வு செய்த அமைச்சர் ஒரு கடையில் தேங்காய் எண்ணையை விலை கொடுத்து வாங்கி விற்பனையை துவக்கி வைத்தார், விழாவில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமீது, நகர் மன்ற தலைவர் கீதா மைக்கல் ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.