4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர் ஆகிய இருவர் கைது..!

தருமபுரி அருகே 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

பாலக்கோடு நெடுஞ்சாலைத்துறை அலுவலக சாலை பணியாளர் குப்புசாமி, தனது வருங்கால வைப்பு நிதியிலிருந்து கடன் பெற முயற்சித்து வந்த நிலையில், அதற்கு ஒப்புதல் வழங்க கண்காணிப்பாளர் சந்திரசேகர் குறிப்பிட்ட தொகையினை லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது.

லஞ்சத் தொகையை இளநிலை உதவியாளர் தனபால் வாங்கியபோது அவரை கைது செய்த போலீசார், அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சந்திரசேகரையும் கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.