பிரித்தானிய மன்னர் சார்லஸ் ஆண்டுதோறும் பனிச்சறுக்கு விளையாட்டுக்காக சுவிட்சர்லாந்துக்கு செல்வது வழக்கம்.
45 ஆண்டு கால வழக்கம் முதன்முறையாக ரத்து
மன்னர் சார்லஸ் கடந்த 45 ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும், பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் பனிச்சறுக்கு விளையாடுவதற்காக சுவிட்சர்லாந்துக்கு செல்வதுண்டு.
இம்முறை அவர் பனிச்சறுக்கு விளையாடுவதற்காக சுவிட்சர்லாந்து செல்லவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
Credit: Getty
காரணம் இதுதான்
வரும் மே மாதம் 6ஆம் திகதி, மன்னர் சார்லசுக்கு முடிசூட்டு விழா நடத்தப்பட உள்ளது. கை அல்லது காலில் கட்டுடன் முடிசூட்டுவிழாவில் கலந்துகொள்ள அவருக்கு விருப்பம் இல்லையாம்.
ஏற்கனவே 1988ஆம் ஆண்டு, சார்லசும் சில நண்பர்களும் பனிச்சறுக்கு விளையாடச் சென்றிருந்தபோது, மயிரிழையில் உயிர் தப்பினார் சார்லஸ். ஆனால், அந்த விபத்தில் அவரது நண்பரான Major Hugh Lindsay கொல்லப்பட்டது தொடர்பான செய்தி நினைவிருக்கலாம்.
அத்துடன், பலர் விலைவாசி உயர்வால் வாழவே திணறிக்கொண்டிருக்கும் நிலையில், தான் பனிச்சறுக்கு விளையாட சுவிட்சர்லாந்து செல்வது ஆடம்பரமாக இருக்கும் என்பதால் அதை மன்னர் விரும்பவில்லையாம்.
மேலும், சார்லஸ் மன்னரானபின் ஒரு நாட்டுக்கு முதன்முறை செல்வது அரசுமுறைப்பயணமாகத்தான் இருக்கவேண்டும், சுற்றுலாவுக்காக இருக்கக்கூடாது என மன்னருடைய உதவியாளர்களும் கருதுகிறார்களாம்.
Credit: Bierne Jones