9 மாதங்களில் 6வது முறை: ரெப்போ வட்டி விகிதம் உயர்வு| EMIs likely to go up as RBI hiked repo rate by 25bps

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால், இந்த வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.50 சதவீதமானது. கடந்த 9 மாதங்களில் ரெப்போ வட்டி விகிதம் தொடர்ச்சியாக 6வது முறையாக உயர்த்தப்பட்டு உள்ளது.

மும்பையில் நிருபர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில்இருந்து 6.50 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. 2018 ம் ஆண்டிற்கு பிறகு அதிகபட்சமான வட்டியாக 6.50 சதவீதம் உள்ளது.

பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளோம். 2023 – 24 நிதியாண்டில் 4வது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.6 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

latest tamil news

ரெப்போ வட்டி விகிதம் உயர்வு காரணமாக, வீடு மற்றும் வாகனங்களுக்கான கடன் உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.