தனது திருமண லெஹாங்காவை பார்த்து கடுப்பான நடிகை கியாரா அத்வானி, ஸ்டைலிஸ்ட்டுகளை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சித்தார்த் – கியாரா பாலிவுட் சினிமாவில் பிரபல நட்சத்திரங்களாக இருப்பவர்கள் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் நடிகை நடிகை கியாரா அத்வானி. 2014 ஆம் ஆண்டு வெளியான ஃபக்லி என்ற படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு அறிமுகமான நடிகை கியாரா அத்வானி ‘எம்.எஸ். தோனி தி அண்டோல்டு ஸ்டோரி’ படத்தின் மூலம் பெரும் பிரபலமானார். கியாரா அத்வானியும் சித்தார்த் மல்ஹோத்ராவும் இணைந்து 2021 ஆம் ஆண்டு ‘ஷேர்ஷா’ என்ற படத்தில் நடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. Nayanthara: எத்தனை கோடி கொடுத்தாலும் இனி அவர் கூட நடிக்கவே மாட்டேன்… பிரபல நடிகர் மீது உச்சக்கட்ட கோபத்தில் நயன்!
அரண்மனையில் திருமணம்இதையடுத்து இருவரும் அடிக்கடி டேட்டிங் செல்லும் போட்டோக்கள் வெளியாகி வந்தது. இந்நிலையில், காதலர்களான நடிகை கியாரா அத்வானியும் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் நேற்று திருமணம் செய்துகொண்டனர். ராஜஸ்தானின் ஜெய்சல்மாரில் உள்ள சூர்யகிரக் அரண்மனையில் கியாரா அத்வானி-சித்தார்த் மல்ஹோத்ரா திருமணம் விமரிசையாக நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்களும், நெருங்கிய நண்பர்கள் பலர் பங்கேற்றனர்.
Baby Sara: பிஞ்சிலேயே பழுத்த ‘சைவம்’ சாரா பாப்பா… என்னம்மா புகை விடுது.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
திருமண உடையால் அப்செட்கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ராவின் திருமண போட்டோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. புதுமண தம்பதிகளான கியாராவுக்கும் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கும் சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தனது திருமண உடையை பார்த்து நடிகை கியாரா அத்வானி கடுப்பான தகவல் வெளியாகியுள்ளது.
Sadha: மாடர்ன் லுக்… ரெட் கேக் போல் இருக்கும் ஷங்கர் பட நடிகை!
டிசைனரிடம் கோபம்கியாரா அத்வானி தனது திருமண உடையின் ஃபைனல் அவுட்டை பார்த்த போது அது, தான் எதிர்பார்த்ததை போன்று இல்லையாம். இதனால் கடுப்பான கியாரா அத்வானி இது என்ன டிரெஸ்? என அவரது ஸ்டைலிஸ்டுகளிடம் காஸ்ட்யூட் டிசைனரிடமும் கடுமையாக கத்தியுள்ளார். இதனால் கியாரா அத்வானியுடன் இருந்தவர்கள் அரண்டு போயிவிட்டர்களாம். தான் எதிர்பார்த்தது ஒன்று ஆனால் கிடைத்தது ஒன்று என கல்யாண லெஹாங்காவால் அப்செட்டில் இருந்தாராம் நடிகை கியாரா அத்வானி.
Leo, Trisha: மூன்றே நாளில் த்ரிஷா சென்னை திரும்பியதற்கான காரணம் இதுதான்.. படக்குழு தகவல்!
ஷங்கர் இயக்கத்தில்…கியாரா அத்வானியும் சித்தார்த் மல்ஹோத்ராவும் காதலில் இருந்த போது திடீரென அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சில மாதங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளாமல் இருந்து வந்தனர். பின்னர் திடீரென இருவரும் மீண்டும் சேர்ந்துவிட்டனர். இருவரின் காதலும் முறிந்ததாக கூறப்பட்ட நிலையில் கியாராவின் Bhool Bhulaiya 2 படத்தை பார்த்தார் சித்தார்த். அதன்பிறகு இருவரும் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி தங்களின் காதலை புதுப்பித்துக்கொண்டனர். கியாரா அத்வானி தற்போது ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் ஆர்.சி. 15 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்லூரி விழாவில் நயன்தாரா.. காரணம் இதானா?
Kiara Sidharth Wedding