தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தமிழ் மட்டும் இல்லாமல் இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். திரையிலகில் முன்னணி நடிகராக திகழ்ந்தாலும் கதாநாயகனாக மட்டுமல்லாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் எல்லா கதாபாத்திரங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்தாலும் ஹீரோ இமேஜ் பார்க்காமல் எல்லா கதாபாத்திரங்களிலும் முத்திரை பதித்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதியின் மிரட்டலான வில்லன் வேடம் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து அண்மையில் ’டிஎஸ்பி’ படம் வெளியானது. பொன்ராம் இயக்கியிருந்த இந்தப்படத்தில் அனுகீர்த்தி, குக் வித் கோமாளி புகழ், சாந்தினி, பிக்பாஸ் பிரபலம் ஷிவானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் நடிகர் விமலும் கேமியோ ரோலில் நடித்திருந்தார். கடும் விமர்சனங்களை சந்தித்த இந்தப்படம் பாக்ஸ் ஆபிசில் படு தோல்வியை தழுவியது.
விஜய் சேதுபதி தற்போது வெற்றிமாறனின் விடுதலை, இந்தியில் ஜவான், மும்பைக்கார், மெர்ரி கிறிஸ்துமஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் ‘ஃபார்ஸி’ எனும் இந்தி இணையத்தொடரிலும் நடித்து முடித்துள்ளார். இந்த தொடர் வரும் 10 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. ‘தி பேமிலி மேன்’ வெப் சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டிகேவும் இணைந்து ‘பார்ஸி’ தொடரை எழுதி இயக்கிவுள்ளனர்.
Pathaan: பிரபல நடிகைகளுடன் ‘பதான்’ படத்தை பார்த்து ரசித்த கமல்: யார் யார் தெரியுமா.?
இந்நிலையில் இந்த வெப் சீரிஸ் தொடர்பான பேட்டி ஒன்றில், ‘என்னை பான் இந்தியா ஸ்டார் என சொல்லிக் கொள்வதில் எனக்கு எப்போதும் விருப்பமில்லை. அதைவிட நல்ல நடிகர் என்ற பாராட்டுகளையே நான் விரும்புகிறேன். ‘பான் இந்தியா’ என்ற விஷயம் ஒரு நடிகருக்கும், இயக்குநருக்கும் அழுத்தம் தரக்கூடிய ஒன்று. குஜராத்தி, பெங்காலி என எந்த மொழியானாலும் அதில் வாய்ப்புக் கிடைத்தால் நடிக்கத் தயாராகவே இருக்கிறேன்”என்று தெரிவித்துள்ளார்.
தமிழ், பாலிவுட் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் நடித்துள்ள விஜய் சேதுபதி, தன்னை பான் – இந்திய நடிகர் என அழைக்க வேண்டாம் என்று கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை அளித்துள்ளது. ‘குரங்கு பொம்மை’ இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் துவங்கியது குறிப்பிடத்தக்கது.
AK 62: அஜித்தின் அடுத்த தரமான சம்பவம்: தாறுமாறு அப்டேட் ரெடி..!