தினசரி உணவில் பருப்பு வகைகள் இல்லாமல் சமையல் இல்லை என்றே சொல்லாம். ஏதாவது ஒரு உணவில் ஒரு வகை பயறு நிச்சயம் இடம் பெறும். தாவரங்களை விட அதிக சத்துகள் நிறைந்தவையாக பயறு வகைகள் உள்ளன. புரதச்சத்து அதிகமுள்ளவைகளில் பயறு வகை பயிர்களே முக்கிய இடம் வகிக்கின்றன.
பயறு வகைகளின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐ.நா., சார்பில் 2019 முதல் பிப். 10ல் உலக பயறு வகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. பலரும் தினசரி உணவில் ஏதாவது ஒரு பயறு, பருப்பு வகையை சேர்ப்பது நலம். காய்கறியை விட இவற்றில் சத்து அதிகம். புரதச்சத்து அதிகமுள்ளவைகளில் பயறு வகை முக்கிய இடம் வகிக்கின்றன. ஒருவர் தினமும் 85 கிராம் பருப்பை உணவில் சேர்க்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. ‘நிலையான எதிர்காலத்துக்கு பயறு வகைகள்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து.
சராசரியாக 100 கிராம் பயறு வகை பயிரில் 335 கலோரி எரிசக்தி, 20 கிராம் புரதச்சத்து, 140 மில்லி கிராம் கால்சியம், 300 மி.கி., பாஸ்பரஸ், 8 மி.கி., இரும்புச்சத்து, 0.5 மி.கி., தயாமின், 0.3 மி.கி.,நியாசின் உள்ளது.இறைச்சி உண்பதால் எவ்வளவு புரதச்சத்து கிடைக்குமோ அந்த அளவுக்கு பயறு வகை பயிர்களை உண்ணும் போதும் புரதச்சத்து கிடைக்கிறது.
அதனால் இதனை ‘ஏழைகளின் இறைச்சி’ எனவும் அழைக்கப்படுகிறது. இதில் கொழுப்புச்சத்தும், நார்ச்சத்தும் இருப்பதால் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மனிதர்களுக்கு மட்டுமின்றி கால்நடைகளுக்கும் சிறந்த தீவனமாகவும், பசுந்தாள் உரமாகவும் விளங்குகின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement