கனடாவில் குன்றின் அடியில் சடலமாக மீட்கப்பட்ட தந்தையும் மகளும்: அதிரவைக்கும் பின்னணி


கனடாவின் ஒன்ராறியோவில் குன்றின் அடியில் சடலமாக மீட்கப்பட்ட தந்தையும் மகளும் விவகாரத்தில், அது கொலை மற்றும் தற்கொலையாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

சிறுமியை பாதுகாக்க தவறிய

ஒன்ராறியோவின் மில்டன் பகுதியில் அமைந்துள்ள குன்றின் அடியில் கடந்த 2020 பிப்ரவரி மாதம், நான்கு வயதேயான கீரா ககன் மற்றும் அவரது தந்தை ராபின் பிரவுன் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர்.

கனடாவில் குன்றின் அடியில் சடலமாக மீட்கப்பட்ட தந்தையும் மகளும்: அதிரவைக்கும் பின்னணி | Ontario Girl Found Dead Was Killed By Father

@ctvnews

இந்த நிலையில், குறித்த வழக்கு தொடர்பில் வெளியான அறிக்கை ஒன்றில், தொடர் எச்சரிக்கை, ஆபத்து காரணிகள் மற்றும் பல கட்ட நீதிமன்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டும் சிறுமி கீராவைப் பாதுகாக்க சமூக அமைப்புகள் தவறிவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த துயர சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டது, ஆனால் அனைத்தும் நேற்று நடந்தது போல இருக்கிறது என தெரிவித்துள்ளார் கீராவின் தாயார் ஜெனிபர் ககன்.

இந்த வழக்கில், திருமண உறவை துண்டித்ததற்காக தமது மனைவிக்கு எதிராக கணவனின் தரப்பில் முன்னெடுக்கப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கையாக இருக்கலாம் இந்தக் கொலை மற்றும் தற்கொலை என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கணவன் தொடர்பில் எச்சரிக்கை

கீராவின் மரணத்தின் போது பிரவுனும் ககனும் நான்கு வருடங்களாக பிரிந்திருந்தனர்.
மட்டுமின்றி, விவாகரத்துக்கு பிறகு குடும்ப நல நீதிமன்றத்தில் ககன் பலமுறை பிரவுன் தொடர்பில், அவரது நடவடிக்கை தொடர்பில் எச்சரித்துள்ளார்.

கனடாவில் குன்றின் அடியில் சடலமாக மீட்கப்பட்ட தந்தையும் மகளும்: அதிரவைக்கும் பின்னணி | Ontario Girl Found Dead Was Killed By Father

@ctvnews

மட்டுமின்றி, மகள் கீராவை தம்முடன் வாழ அனுமதிக்க வேண்டும் என்ற தொடர் சட்டப் போராட்டத்திலும் ககன் ஈடுபட்டு வந்துள்ளார்.
மேலும், 2020 ஜனவரி 28 அன்று ககன் ஒரு அவசரப் பிரேரணையை முன்வைத்து, மகள் தொடர்பில் பிரவுனின் கூட்டுக் காவலை இடைநிறுத்த நீதிமன்ற உத்தரவைக் கோரினார்.

ஆனால் நீதிமன்ற உத்தரவு வெளியாகவிருந்த வேளையில், இந்த இறப்பு தகவல் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.