புதுடில்லி :ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், பிப்ரவரி 18ம் தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில், தற்போது மார்ச் முதல் வாரத்திற்கு மாற்றப்படும் என தெரிகிறது.
பல மாநில சட்டசபைகளில் பட்ஜெட் அமர்வுகள் நடைபெறுவதால், பிப்ரவரி 18-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில், அம்மாநிலங்களின் நிதியமைச்சர்கள் அல்லது பிரநிதிகள் நேரில் பங்கேற்பது கடினமாக இருக்கலாம் என்பதற்காக, இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில், ஏற்கனவே வெளியிடப்பட்ட அமைச்சர்கள் குழுவின் அறிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. குறிப்பாக ஜி.எஸ்.டி., மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்கப்படுவது குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது. இது மிகவும் முக்கியமான விஷயம் என்பதால், இம்முறை இது குறித்து முடிவுகள் எடுக்கப்படக்கூடும் என தெரிகிறது.
தலைமை செயலர்கள் சந்திப்பின் போது கூட, இது குறித்து பேசப்பட்டது.அடுத்து, பான் மசாலா மற்றும் குட்கா தயாரிக்கும்நிறுவனங்களுக்கான வரி தொடர்பான விஷயங்கள்குறித்த அறிக்கையும் விவாதிக்கப்படும் என தெரிகிறது.அடுத்து, ஆன்லைன் சூதாட்டம், சூதாட்ட விடுதிகள் மற்றும் குதிரைப் பந்தயம் மீதான ஜி.எஸ்.டி., வரி விதிப்பு சம்பந்தமாக, மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தலைமையிலான மற்றொரு குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement