டிஜிட்டல் கரன்சி மேலும் 9 நகரங்களில் அறிமுகம்| Digital Currency introduced in 9 more cities

மும்பை :ரிசர்வ் வங்கி, அண்மையில் ‘இ -ரூபாய்’ எனும் ‘டிஜிட்டல் கரன்சி’யைசில்லரை வாடிக்கையாளர்களுக்கு வெள்ளோட்டமாக அறிமுகம் செய்திருந்த நிலையில், தற்போது இத்திட்டத்தில் கூடுதலாக ஐந்து வங்கிகள் இணையும் என்றும், மேலும் 9 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும்

தெரிவிக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக, ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் ரபி சங்கர் கூறியதாவது:டிஜிட்டல் கரன்சியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில், ரிசர்வ் வங்கி அவசரம் காட்டவில்லை.

மாறாக, மெதுவாக இதை ஒரு நிலையான மாற்றமாக ஏற்படுத்த விரும்புகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் துவக்கத்தில், 8 வங்கிகளுடன் இணைந்து 5 நகரங்களில் குறிப்பிட்ட சில்லரை வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் கரன்சியை வெள்ளோட்டமாக அறிமுகம் செய்தது.

தற்போது இந்த வெள்ளோட்ட சேவை கிடைக்கும் நகரங்களின் எண்ணிக்கையை 9ஆக அதிகரிப்பதோடு, கூடுதலாக 5 வங்கிகளும் சேர்க்கப்பட உள்ளது. டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனைகள் மெதுவாக அதிகரித்து வருகின்றன. இதுவரை மொத்தம் 7.7 லட்சம் ரூபாய் அளவுக்கு
மட்டுமே பரிவர்த்தனைகள் நடைபெற்று உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.