திரிபுராவில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 5 ரூபாயில் உணவு: ஜே.பி.நட்டா வாக்குறுதி

அகர்தலா: திரிபுராவில் மொத்தமுள்ள 60 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் பிப்ரவரி 16ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், நேற்று அகர்தலா சென்ற பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, முதல்வர் மாணிக் சாஹாவுடன் இணைந்து பாஜ தேர்தல் அறிக்கையை வௌியிட்டார். அதில், திரிபுராவில் பாஜ மீண்டும் ஆட்சி அமைத்தால், திரிபுராவில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு கூடுதல் தன்னாட்சி உரிமை அளிக்கப்படும். விவசாயிகளின் உதவித்தொகை உயர்த்தப்படும். ரப்பரை அடிப்படையாக கொண்ட தொழில் சார்ந்த உற்பத்தி மண்டலங்கள் தொடங்கப்படும், மதகுரு அனுகுல் சந்திரா திட்டத்தின்கீழ் அனைவருக்கும் 5 ரூபாய்க்கு உணவு வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.