உனா, ஹிமாச்சல பிரதேசத்தில் குடிசைகள் தீப்பற்றி எரிந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஹிமாச்சலில் உள்ள ஹம்ப் நகரில், பீஹாரைச் சேர்ந்த பஹதேஷ் தாஸ், ரமேஷ் தாஸ் ஆகியோரின் குடும்பத்தினர், குடிசைகள் அமைத்து தங்கி இருந்தனர். நேற்று முன்தினம் இரவு ரமேஷ் தாசின் குடிசை திடீரென தீப்பற்றி எரிந்தது.
தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை போராடி அணைத்தனர். எனினும், இந்த விபத்தில் ரமேஷ் தாசின் மூன்று மகன்கள் மற்றும் அவரது உறவினரின் மகன் என மொத்தம் நான்கு பேர் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் சுக்விந்தர் சிங், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உடனடியாக நிவாரணம் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement