புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் 60 லட்சம் வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் 69 ஆயிரம் வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள 25 உயர் நீதிமன்றங்களில் 59,87,477 வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் 69,511 ஆயிரம் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. அதிகபட்சமாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் 10.3 லட்சம் வழக்குகளும் குறைந்தபட்சமாக சிக்கிம் உயர் நீதிமன்றத்தில் 171 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.