எடப்பாடி இறக்கி விட்ட சீக்ரெட் ஸ்பை… ஈரோடு கிழக்கில் அலர்ட் ஆன மாஜிக்கள்!

தமிழ்நாடு அரசின் ஒட்டுமொத்த கவனமும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் பக்கம் திரும்பியுள்ளது. இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிட அதன்பிறகு பிரச்சாரம் களைகட்ட ஆரம்பித்துவிடும். பிரதான கட்சிகளான காங்கிரஸ், அதிமுக இடையில் தான் போட்டி என்று சொல்லப்பட்டாலும் நாம் தமிழர், தேமுதிக, சுயேட்சைகள் என வாக்குகளை பிரிக்க நூதன முறைகளை கையாள தயாராகி விட்டனர்.

காங்கிரஸ் வேட்பாளர்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதில் முக்கிய காரணங்களில் ஒன்று ஈவிகேஎஸ் இளங்கோவன். உள்ளூர் அரசியல்வாதி. எம்.எல்.ஏ முதல் மத்திய அமைச்சர் வரை பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். பெரியாரின் பேரன், ஈரோடு மக்களுக்கு வழி வழியாக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியது போன்ற விஷயங்களை கூறுகின்றனர்.
உட்கட்சி பூசல்இந்த சாதகமான விஷயங்களை எல்லாம் உடைத்து வெற்றி வாய்ப்பை தங்கள் பக்கம் திருப்பி திமுகவிற்கு எச்சரிக்கை மணி அடிக்க வேண்டும் என்பது தான் எடப்பாடி பழனிசாமியின் குறிக்கோளாக இருக்கிறது. அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்து ஓ.பன்னீர்செல்வத்துடன் மோதல் போக்கு உண்டான போது எடப்பாடிக்கு பெரிதும் கைகொடுத்தது கொங்கு மண்டலம்.
​​
கொங்கு மண்டல செல்வாக்குஅந்தப் பகுதியில் அதிகப்படியான எம்.எல்.ஏக்களை கைவசம் வைத்திருப்பதோடு முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் என பலரும் எடப்பாடிக்கு பின்னால் நிற்கின்றனர். இத்தகைய சூழலில் அதே கொங்கு மண்டலத்தில் ஒரு இடைத்தேர்தல் வந்துள்ளது. இதை ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் யுக்தியாக எடப்பாடி பார்க்கிறார். ஒன்று இடைத்தேர்தல் வெற்றி அல்லது அதிகப்படியான வாக்கு வங்கி.
சின்னமும், வேட்பாளரும்இரண்டாவது தனது பலத்தை நிரூபித்து அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக பதவியேற்பது. இதற்காக டெல்லி வரை காய்களை நகர்த்தி ஒவ்வொரு திட்டமாக செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் தான் உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை, தேர்தல் ஆணையம் முடிவு ஆகியவற்றின் இரட்டை இலை சின்னமும், வேட்பாளரும் தனக்கு சாதகமாக கிடைக்குமாறு செயல்பட்டுள்ளார்.
செங்கோட்டையன் டீம்இதன்மூலம் சட்ட ரீதியாகவே வெற்றி பெற்றுவிட்டோம் என எடப்பாடி பழனிசாமி சற்று உற்சாகத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தகட்டமாக பலகட்ட ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையிலான தேர்தல் பணிக்குழுவிற்கு சில முக்கிய அறிவுரைகள் வழங்கியிருக்கிறார்.
ஸ்பை எம்.எல்.ஏமொத்தமுள்ள 37 வார்டுகளில் மாஜிக்களை பொறுப்பாளராக நியமித்தல், ஸ்வீட் பாக்ஸ் விநியோகம், ஆளுங்கட்சியின் அதிருப்தியாளர்களை தங்கள் வசப்படுத்துதல் என பல்வேறு அசைன்மென்ட்களை கொடுத்துள்ளார். இந்த விஷயங்கள் எல்லாம் சரியாக நடக்கிறதா? இல்லையா? என்பதை கவனித்து தகவல் சொல்லும் வகையில் மேற்கு மண்டல எம்.எல்.ஏ ஒருவரை ஸ்பை போல ரகசியமாக இறக்கி விட்டுள்ளாராம்.
​​
மீண்டும் போர்இதனால் அதிமுக மாஜிக்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் அலர்ட் மோடிற்கு சென்றுள்ளனர். இந்த இடத்தில் அதிமுகவும், இரட்டை இலையும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக தற்காலிகமாக தான் எடப்பாடி வசமாகியுள்ளது என்பதை மறந்து விடக் கூடாது. தேர்தல் முடிந்த பிறகு அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு வெளிவரும். அதன்பிறகு தான் அரசியல் அதிரடியே இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.