புதுடில்லி,:மத்திய பல்கலைகளில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான, ‘கியூட்’ நுழைவுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு மார்ச் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து பல்கலை மானியக் குழுத் தலைவர் ஜகதீஷ் குமார் நேற்று கூறியதாவது:
மத்திய பல்கலைகளில் இளநிலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கியூட் நுழைவத் தேர்வு, மே ௨௧ – ௩௧ம் தேதிகளில் நடைபெறும். இதற்காக ‘ஆன்லைன்’ வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் நடைமுறை நேற்று நள்ளிரவு துவங்கியது. மார்ச், ௧௨ வரை விண்ணப்பிக்கலாம்.
எந்தெந்த நகரங்களில் நுழைவுத் தேர்வு நடைபெறும் என்பது, ஏப்., ௩௦ல் அறிவிக்கப்படும். என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் இருந்து மே இரண்டாவது வாரத்தில், தேர்வு அனுமதி சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்.
அனைத்து நடைமுறைகளும் ஜூலைக்குள் முடிக்கப்பட்டு, ஆக., ௧ முதல் வகுப்புகள் துவங்கும்.
இந்தாண்டு நுழைவுத் தேர்வை, ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உட்பட ௧௩ மொழிகளில் எழுதலாம். தேர்வு எழுத விரும்புவோர், https://cuet.samarth.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement