கடந்த ஆண்டு குதிரை காவலர் அணிவகுப்பின் போது ஆயுதமேந்திய அதிகாரிகளை நோக்கி
சென்றதாக கூறப்பட்டு கைது செய்யப்பட்ட இலங்கையர் நீதிமன்றில்
கூச்சலிட்டதாக இங்கிலாந்தின் செய்தித்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (08.02.2023) பதிவாகியுள்ளது.
இந்நிலையில் 30 வயதான பிரசாந்த் கந்தையா என்ற இலங்கையரே நீதிமன்றில் கூச்சலிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குதிரைப்படையினரின் அணிவகுப்பு
‘பிரித்தானியாவை நான் வெறுக்கின்றேன், நான் இலங்கைக்கு திரும்பிச் செல்ல
விரும்புகின்றேன்’ என்று கூச்சலிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 18ஆம்
திகதியன்று செயின்ட் ஜேம்ஸ் பூங்காவில் குதிரைப்படையினரின் அணிவகுப்பு
நடைபெற்ற வேளையில் கத்தி ஒன்றுடன் காவலர்களை நோக்கி ஓடியதாக கூறப்பட்டு பிரசாந்த் கந்தையா கைது
செய்யப்பட்டுள்ளார்.
எனினும் தற்கொலை செய்துக்கொள்ளும் நோக்கத்தில் இருந்த அவர், தம்மை காவலர்கள்
சுட்டுக்கொல்லவேண்டும் என்பதற்காகவே, அவர்களை நோக்கி ஓடியதாக நீதிமன்றில்
தெரிவித்துள்ளார்.
விடுதலை செய்ய பரிந்துரை
இந்நிலையில் அவரை அறங்கூறுனர்கள் விடுதலை செய்ய பரிந்துரைத்த நிலையில் திடீரென்று அவர் நீதிமன்றத்தில் கூச்சலிட்டுள்ளார்.
மேலும் நீதிமன்றில் கூச்சலிட்டமைக்காக சவுத்வார்க் கிரவுன்
நீதிமன்றத்தில் இன்று (09.02.2023) அவருக்கு தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.