புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான எஸ்எஸ்எல்வி-டி2 ராக்கெட் மூலம் 3 செயற்கைக் கோள்களை இன்று விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ

ஸ்ரீஹரிகோட்டா: புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான எஸ்எஸ்எல்வி-டி2 ராக்கெட் மூலம் 3 செயற்கைக் கோள்களை இஸ்ரோ இன்று விண்ணில் செலுத்துகிறது. தகவல் தொடர்பு, தொலையுணர்வு மற்றும் வழிகாட்டி செயற்கைக்கோள் திட்டங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ செயல்படுத்தி வருகிறது.  பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி  ரக ராக்கெட்டுகள் மூலம் செயற்கைகோள்களை விண்ணில் நிலைநிறுத்தி வந்தது.

பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 1,750 கிலோ வரையயிலும்,  ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 4,000 கிலோ வரையிலுமான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும். இந்நிலையில்  500 கிலோ வரையிலான எடை குறைந்த செயற்கைகோள்களை சுமந்து செல்லும் வகையில், சிறிய ரக எஸ்எஸ்எல்வி ராக்கெட்டுகளை இஸ்ரோ புதிதாக வடிவமைத்துள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி 2 சிறிய ரக செயற்கைக்கோள்களுடன் எஸ்எஸ்எல்வி-டி1 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

ஆனால் ராக்கெட்டின் சென்சார் செயலிழப்பு காரணகான சரியான  சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த முடியாமல் போனது. இதையடுத்து அந்த திட்டம் மேம்படுத்தப்பட்டு  மீண்டும் செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9.18 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.  

இஓஎஸ்-07 புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் மற்றும் கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டில் செலுத்தப்பட்டு தோல்வி அடைந்த செயற்கைக்கோள்களுக்கு பதிலாக தற்போது தயாரிக்கப்பட்ட ஆசாதி சாட்-2 மற்றும் ஜானஸ்-1 உள்பட 334 கிலோ எடை கொண்ட 3 செயற்கைக்கோள்களை இது சுமந்து செல்கிறது.  பூமியில் இருந்து 356.2 கிலோ மீட்டர் உயரத்தில் 450 கிலோ மீட்டர் புவிவட்ட சுற்றுப்பாதையில் இது  நிலைநிறுத்தப்பட உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.