டேங்க் சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கியதில் தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் ரங்கம்பேட்டை கிராமத்தில் எண்ணெய் தொழிற்சாலை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகளுக்கு இடையே அங்கு பூஜைகளுக்குப் பயன்படுத்தப்படும் கலப்பட எண்ணெய் தயாரிப்பும் நடைபெற்று வந்துள்ளது.
இந்நிலையில் சுத்தம் செய்வதற்காக தரைக்கு அடியில் புதைக்கப்பட்ட டேங்கிற்குள் 7 தொழிலாளர்கள் இறங்கினர். அப்போது எண்ணெய் கசடுகளிலிருந்து வெளியான விஷவாயு தாக்கி 7 பேரும் மூச்சு திணறி உயிரிழந்தனர்.
அவர்கள் கிருஷ்ணா, நரசிம்மா, சாகர், பாஞ்சி பாபு, கர்ரி ராமராவ், கட்டமுரி ஜெகதீஷ், பிரசாத் ஆகிய 7 பேர் என்பது விசாரணையில் தெரியவந்தது. தொழிலாளர்கள் உடல்கள் மீட்கப்பட்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் தொழிற்சாலை நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர். தலைமறைவாக உள்ள தொழிற்சாலை உரிமையாளர், கட்டுமான பணி மேற்பார்வையாளர் ஆகியோரையும் தேடி வருகின்றனர்.
இதனிடையே மரணமடைந்த 7 பேர் குடும்பங்களுக்கு ஆந்திர மாநில அரசு தலா 50 லட்ச ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது. தொழிலாளர்கள் ஏழு பேர் உயிரிழந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in