தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த போராளி. இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு கோரி ஆயுதப் போராட்டத்தை கையிலெடுத்தவர். 2009ஆம் ஆண்டு ஈழப் போர் உச்சம் அடைந்த போது இலங்கை அரசுக்கும், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்கும் இடையிலான போரில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பிரபாகரன் மரணம்அவரது உடல் கண்டெடுக்கப்பட்டு மரணம் உறுதி செய்யப்பட்டது, புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சி, இலங்கை தமிழர்கள் படுகொலை என சர்வதேச அரசியல் அரங்கை உலுக்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடந்தேறின. இதுதொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தி இலங்கை அரசை குற்றவாளி கூண்டில் நிறுத்தி தண்டனை பெற்று தர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் முயற்சித்து வருகின்றனர்.
அதிர்ச்சி கொடுத்த பழ.நெடுமாறன்இந்நிலையில் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். இந்த தகவலை அவர் அனுமதியுடன் கூறுகிறேன் எனக் குறிப்பிட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார்.’பிரபாகரன் வருகிறார்’ தமிழக மக்கள் துணையாக நிற்க வேண்டும் – பழ. நெடுமாறன்
இது எப்படி சாத்தியம்?பிரபாகரன் கொல்லப்பட்ட போது டி.என்.ஏ பரிசோதனை எல்லாம் நடத்தப்பட்டு அவர் தான் உறுதி செய்யப்பட்டதே என ஒருபுறம் கேள்வி எழுகையில், மறுபுறம் எங்கள் தலைவர் உயிருடன் இருக்கிறார் என ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். இதுதொடர்பாக மாறுபட்ட கருத்துகள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து கொண்டிருக்கின்றன. இதன் பின்னணியில் பல்வேறு விஷயங்களை கவனிக்க வேண்டியுள்ளது.
அண்ணாமலை பங்கேற்புதீவிர தமிழ் தேசிய அரசியலை பழ.நெடுமாறன் முன்னெடுத்து வந்தாலும் கடந்த ஆண்டு நடந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை பங்கேற்க வைத்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி அன்றைய தினம் பழ.நெடுமாறன் பேசியது தமிழக அரசியல் கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சீன ஆக்கிரமிப்புஏனெனில் பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளியிருந்தார். மேலும் பேசுகையில், இலங்கையில் சீனா ஆழமாக காலூன்றி நிற்கிறது. இது இந்தியாவிற்கு தான் ஆபத்து. பிரதமர் மோடி ராஜதந்திரம் கொண்டவர். தமிழர், சிங்களர் என்ற வேறுபாடின்றி இலங்கை மக்களுக்கு அள்ளி கொடுப்பதாக குறிப்பிட்டார். சமீபத்தில் இலங்கை அரசியல் கட்சி கட்சிகள் விடுத்த அழைப்பை ஏற்று அந்நாட்டிற்கு செல்வதாக அண்ணாமலை கூறியிருந்தார்.
இலங்கை பயணம்அதன்படியே மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உடன் இலங்கை புறப்பட்டு சென்றார். இந்த பயணம் அரசியல் ரீதியாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இலங்கையை பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாக கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதை காரணமாக கொண்டு கடன் தருவதாக கூறி அந்நாட்டிற்குள், அதன் எல்லைப் பகுதிகளில், கடற்பகுதியில் தனது ஆதிக்கத்தை செலுத்த சீனா நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தியாவிற்கு தொல்லைஇது இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. இறுதியில் இலங்கையை காலனி ஆதிக்க நாடாக மாற்றிவிடவும் வாய்ப்பிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இந்த சூழலில் இலங்கைக்கு உதவி செய்யும் நோக்கில் உள்ளே நுழையும் இந்திய அரசு, சில ஆலோசனைகளை முன்வைத்து வருகிறது. சீனாவின் ஆதிக்கத்திற்கு முடிவுகட்ட தான் சொல்லும் ஆளுமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
பிரபாகரன் இருக்கிறார் என்பது போலியான நம்பிக்கை – நாம் தமிழர் ரியாக்ஷ்ன்
பிரபாகரன் பாலிடிக்ஸ்போதிய கடன் தருகிறோம். நிதி நிலையை சரிசெய்து விடலாம் என்றெல்லாம் பேசி வருகிறார்கள். இதனால் தான் பிரபாகரனை வைத்து இலங்கையை தன்னுடைய வழிக்கு கொண்டு வர இந்தியா முயற்சிக்கிறதோ என்ற பார்வையை பலரும் முன்வைக்கின்றனர். பிரபாகரன் சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் மீண்டும் வருவாரா? அதன்பிறகு அவரது அரசியல் எப்படி இருக்கும்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.