ஆசாதி சாட்-2 செயற்கைக்கோளை விண்ணில் ஏவ உறுதுணையாக இருந்த மதுரை திருமங்கலம் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

மதுரை: ஆசாதி சாட்-2 என்ற செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கு உறுதுணையாக செயல்பட்ட மதுரை திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகளுக்கு பள்ளி சார்பில் வரவேற்பு அளித்து கௌரவித்தனர். ஆசாதி சாட்-2 என்ற செயற்கைக்கோள் கடந்த 10ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. இதற்கான பேலோடு பாகத்தை திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகள் 10 பேர் சேர்ந்து வெற்றிகரமாக தயாரித்து அனுப்பினர். அத்துடன் அந்த செயற்கைகோளின் ஏவுதலையும் நேரில் சென்று பார்வையிட்டனர்.

பள்ளியில் நடத்தப்பட்ட பாராட்டு நிகழ்ச்சியில் மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு பேண்ட் வாத்தியம் முழங்க ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக சாதித்த 10 மாணவிகளையும் தோளில் சுமந்து சக மாணவிகள் ஆரவாரம் செய்தனர். சாதனை மாணவிகளின் பெற்றோரையும் பள்ளி நிர்வாகம் கௌரவித்தது. நிகழ்ச்சியில் திருமங்கலம் தொழிலதிபர்கள் மற்றும் பெற்றோர், ஆசிரியர் கழக நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.