முதலாவது பெண்கள் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் மும்பையில் நடத்தப்படுகிறது. மாதம் (மார்ச்) 4-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை மும்பையில் நடக்கிறது. இதையொட்டி ஆமதாபாத், பெங்களூரு, டெல்லி, லக்னோ, மும்பை ஆகிய 5 நகரங்களை அடிப்படையாக கொண்டு அணிகள் உருவாக்கப்பட்டு விற்கப்பட்டு உள்ளன. 5 அணிகளுக்கும் சேர்த்து 30 வெளிநாட்டவர் உள்பட 90 வீராங்கனைகள் தேவைப்படுகிறார்கள். ஏலப்பட்டியலில் 15 நாடுகளை சேர்ந்த மொத்தம் 448 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 269 பேர் இந்தியர். 179 வீராங்கனைகள் வெளிநாட்டவர்.
மும்பையில் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் உள்ள ஜியோ சர்வதேச கூட்டரங்கில் இன்று பிற்பகல் ஏலம் தொடங்கியது. ஒவ்வொரு அணியும் ஏலத்தில் ரூ.12 கோடி செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முதல் சுற்றில் ஏலம் எடுக்கப்பட்ட முன்னணி வீராங்கனைகள் விவரம்:
1. ஸ்மிருதி மந்தனா – ரூ.3.4 கோடி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
2. ஹர்மன்பிரீத் கவுர் – ரூ.1.8 கோடி (மும்பை இந்தியன்ஸ்)
3. சோபி டிவைன் ரூ.50 லட்சம் – (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
4. ஆஷ்லீ கார்ட்னர் – ரூ.3.2 கோடி (குஜராத் ஜெயண்ட்ஸ்)
5. சோபி எக்லெஸ்டோன் – ரூ.1.2 கோடி (உ.பி. வாரியர்ஸ்)
6. எல்லிஸ் பெர்ரி – ரூ.1.7 கோடி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)