வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பார்லிமென்ட் கூட்டத் தொடர் இன்று(பிப்.,13) முடிவடைகிறது. அதானி விவாகாரம் குறித்து விவாதிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக கார்கே கூறியுள்ளார்.
கடந்த 31ம் தேதி இந்த ஆண்டிற்கான முதல் பார்லிமென்ட் கூட்டத்தொடர் துவங்கியது. இதையடுத்து பிப்ரவரி 1ம் தேதி 2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முதல் அமர்வு இன்று பிப். 13ம் தேதி முடிவடைகிறது. அடுத்த அமர்வு மார்ச் 13ல் துவங்கி ஏப். 6 வரை நடக்கவுள்ளது.
காங்., தலைவர் கார்கே செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: பார்லிமென்ட் கூட்டத்தொடரின் முதல் அமர்வின் கடைசி நாள் என்பதால், அதானி விவாகாரம் குறித்து விவாதிப்போம். மற்ற கட்சிகளின் தலைவர்களிடமும் கருத்து கேட்கப்படும் எனக் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி குறித்து பார்லிமென்டில் அவதுாறாக பேசியது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள உரிமை மீறல் புகார் குறித்து விளக்கம் அளிக்கும்படி, காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு லோக்சபா செயலகம், ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது என்ற நிருபர்களின் கேள்விக்கு கார்கே அளித்த பதில்: காங்., எம்.பி ராகுல் இதற்கு உரிய பதில் அளிப்பார் எனக் கூறினார்.
பா.ஜ., சவால்:
ராகுலுக்கு அனுப்பிய நோட்டீஸ் குறித்து பா.ஜ., எம்.பி நிஷிகாந்த் துபே அளித்த பேட்டி: சபாநாயகருக்கு நோட்டீஸ் கொடுக்காமல், பிரதமர் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகளை எழுப்ப முடியாது.
ராகுல் பிரதமர் குறித்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் ஆதாரத்தை பிப்ரவரி 15ம் தேதிக்குள் சபாநாயகரிடம் ஓப்படைக்க வேண்டும். இல்லையெனில், அவர் பார்லிமென்டில் பிரதமர் குறித்து பேசிய அவதூறு கருத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜ., எம்.பி சவால் விடுத்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement