இளவரசர் வில்லியம் கேட் திருமணத்தின்போது நிகழ்ந்த ஒரு தவறு, பிரித்தானிய மகாராணியாரை கோபத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றதைக்குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
உலகமே பார்த்த நிகழ்ச்சியில் நிகழ்ந்த தவறு
2011ஆம் ஆண்டு, இளவரசர் வில்லியம் கேட் திருமணம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியை உலகம் முழுவதும் சுமார் 162 மில்லியன் மக்கள் கண்டுகளித்தார்கள்.
அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியில், மக்களைப் பார்த்து கையசைத்துக்கொண்டிருந்த மகாராணியார், தனது இடது கை கையுறையில் ஒரு கிழிசல் இருப்பதைக் கவனித்துள்ளார்.
இத்தனை பேர் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் தான் கிழிந்த கையுறையை அணிந்திருந்தது தெரியவந்ததால், கடும் கோபமடைந்தாராம் மகாராணியார்.
வீடு திரும்பும்போது, மக்களைப் பார்த்து கையசைக்க தனது வலது கையைப் பயன்படுத்தி சமாளித்தாராம்.
ஆனால், அதற்குப் பிறகு, இனி இப்படி ஒரு விடயம் நடந்துவிடக்கூடாது என முடிவு செய்த மகாராணியார், அன்று முதல் தன்னுடன் கூடுதலாக ஒரு ஜோடி கையுறை வைத்துக்கொள்வதுண்டாம்!