கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கு தடுப்பூசி முகாம் ஜூனில் துவக்கம்| Vaccination camp for cervical cancer starts in June

புதுடில்லி : கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கு எதிரான, நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட சீரம் இன்ஸ்டிடியூட்டின், ஹெச்.பி.வி., என்ற தடுப்பூசி, ‘செர்வாவாக்’ என்ற பெயரில் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த தடுப்பூசி செலுத்தும் முகாம், முதல்கட்டமாக தமிழகம், கர்நாடகா, மிசோராம், சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களில் ஜூனில் துவங்கப்படுகிறது. இதில், 2.55 கோடி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய நோய்த் தடுப்பாற்றல் திட்டத்தில் இந்த தடுப்பூசியை வெளிக்கொணர, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் திட்டம் தீட்டியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.