வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: ஐ.பி.எல் போட்டிகளை போன்று பெண்கள் பிரிமியர் லீக் போட்டிக்கான ஏலத்தில் இந்திய வீராங்கனைகளை 5 அணிகளும் கோடிகளில் ஏலம் எடுத்துள்ளது. அதிகபட்சமாக இந்திய ஆல்ரவுண்டர் ஸ்மிருதி மந்தனாவை ரூ.3.4 கோடிக்கு பெங்களூரு அணி ஏலம் எடுத்தது.
இந்திய கிரிக்கெட் போர்டு (பிசிசிஐ) சார்பில் ஐ.பி.எல் பாணியில் பெண்கள் பிரிமியர் லீக் (டபிள்யு.பி.எல்) முதல் சீசன் வரும் மார்ச் 4 முதல் 26ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக குஜராத், மும்பை, பெங்களூரு, டில்லி, உ.பி., என ஐந்து அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான வீராங்கனைகள் ஏலம், மும்பையில் இன்று (பிப்.,13) நடைபெற்றது.
இதில், இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரை ரூ.1.80 கோடிக்கு மும்பை அணி ஏலத்தில் எடுத்தது. இந்திய நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவை அதிகபட்சமாக ரூ.3.40 கோடிக்கு பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது. அதேபோல் இந்திய வீராங்கனைகள் தீப்தி சர்மாவை (ரூ.2.60 கோடி) உ.பி., அணியும், ரேணுகா சிங் தாக்கூரை (ரூ.1.50 கோடி) பெங்களூரு அணியும் எடுத்தது.
ஆஸ்திரேலியாவின் பெத் மூனி (ரூ.2 கோடி) குஜராத் அணிக்கும், ஆல்ரவுண்டர் எல்லீஸ் பெர்ரி (ரூ.1.7 கோடி) பெங்களூரு அணிக்கும், இங்கிலாந்தை சேர்ந்த நாட்சிவர் பர்னட் (ரூ.3.2 கோடி) மும்பை அணிக்கும், ஷோபியா டன்கிள் (ரூ.60 லட்சம்) குஜராத் அணிக்கும் ஏலம் போயினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement