தகுதியான இளைஞர் – யுவதிகளுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு வழங்கப்படுமென்று ஜப்பான் பிமோ கிகாகு நிறுவனத்தின் பணிப்பாளர் ஹிரோசுகி பிமோடோரி தெரிவித்துள்ளார்.
சீதாவக்க மெதிசூரி ஜப்பான் மொழிப் பயிற்சி நிலையத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு ஜப்பான் மொழிப் பயிற்சி மற்றும் கலாசார கல்வியும் இங்கு வழங்கப்படவுள்ளது. அரசாங்கத்தினால் பயன்படுத்தப்படாத கட்டிடங்களை பயனுள்ள வகையில் பொதுமக்கள் மத்தியில் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்தக் கட்டிடம் சம்பந்தப்பட்ட மத்திய நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்த்தனவின் தலைமையில் நேற்று முன்தினம் இந்த நிலையம் திறந்து வைக்கப்பட்டது.