திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த பூண்டி நெய்வேலி பகுதியில் உள்ள இந்திய ஒன் ஏ.டி.எம். எந்திரத்தில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. சிசிடிவி கேமராவுக்கு கருப்பு ஸ்பிரே அடித்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலையில் உள்ள 4 ஏ.டி.எம். மையங்களில் ஏற்கனவே கொள்ளை நிகழ்ந்ததை அடுத்து பூண்டியிலும் கொள்ளை முயற்சி அரங்கேறியது.