துருக்கி, சிரியாவுக்கு மேலும் இந்தியாவின் நிவாரண பொருட்கள்

துருக்கி, சிரியா நாடுகளுக்கு இந்தியாவின் நிவாரண பொருட்களுடன் 7 ஆவது விமானம் சென்றடைந்துள்ளது.

அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா சார்பில் தொடர்ந்து நிவாரண பொருட்களும் அனுப்பப்பட்டு வருகின்றன. உணவு பொருட்கள், மருந்துகள், போர்வைகள் என ஏராளமான பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.

மேலும் ஏராளமான நிவாரண பொருட்களுடன் 7 ஆவது இந்திய விமானப்படை விமானம் நேற்று (12) இரு நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் சோலார் விளக்குகள், அவசர கால மருந்துகள் உள்பட 35 தொன் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
23 தொன் பொருட்கள் சிரியா தலைநகர் டமாஸ்கசுக்கும், 12 தொன் பொருட்கள் துருக்கிக்கும் வழங்கப்பட்டன.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியாவில் இந்திய பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரமாக மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை இந்தியா அனுப்பிய பொருட்களை பெற்றுக்கொண்டுள்ளதாக அந்நாடுகளின் செய்தி தொடர்பாளர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.