நிலத் தகராறால் ஏற்பட்ட விபரீதச் சம்பவம்.. உடற்கல்வி ஆசிரியரை அரிவாளால் வெட்டிய தந்தை-மகன் கைது..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நிலத்தகராறில் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியரை அரிவாளால் வெட்டிய தந்தை,மகன் கைது செய்யப்பட்டனர்.

கயத்தாரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக உள்ள சுப்புராஜ்-க்கும் கண்ணன் என்பவருக்கும் இடையே நிலம் தொடர்பாக பிரச்சினை இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சுப்புராஜ் மற்றும் கண்ணன், அவரது மனைவி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி, மகன் செல்வக்குமார் ஆகியோர் நிலப்பிரச்சினை தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில் சுப்புராஜை அரிவாளால் வெட்டியதில் அவரது 4 விரல்கள் துண்டானது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் கண்ணன், செல்வக்குமார் ஆகியோரைக் கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.