ஈரோடு: பிரபாகரன் உயிரோடு இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டியளித்துள்ளார். ஒன்றிய அரசு 2023-2024ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை கார்ப்பரேட் நிறுவனங்கள் நலனைப் பாதுகாக்கும் வகையில் உள்ளது ஏழை எளிய மக்களுக்கு எதிராக தயாரிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தை அக்கட்சியின் மாநிலச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
கிராம புறத்தில் நிலமற்ற விசாய கூலி தொழிலாளர்களுக்கு பயனளித்து வந்த 100நாள் வேலை திட்டத்திற்கு 2014ம் ஆண்டு முதல் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதை படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது கடந்த நிதியாண்டைவிட இந்தாண்டு 25ஆயிரம் கோடி ரூபாய் வரை நிதி குறைக்கப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
விவசாயிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி கடந்த ஆண்டை விட இந்தாண்டு குறைக்கப்பட்டுள்ளது தொடர்ந்து மானியமும் குறைக்கப்பட்டுள்ளது என்று சுட்டிககட்டிய முத்தரசன், அதானி நிறுவனம் உலக பட்டியல் 609இடத்தில் இருந்த நிலையில் 2வது இடத்திற்கு எப்படி உயர்ந்து என்று மத்திய அரசிடம் இருந்து பதில் வரவில்லை என்று கூறினார்.
அமெரிக்க நிறுவனம் அதானி நிறுவனம் முறைகேடுகள் குறித்து வெளியிட்டும் நாடு விவாதம் செய்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இதுவரை எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
இதனால் அதானி நிறுவன முறைகேடுகள் குறித்து பாரளுமன்ற கூட்டு குழு விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்திய முத்தரசன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இன்று மாலை முதல் சிபிஐ கட்சி பிரச்சாரம் செய்ய உள்ளோம் என்று தெரிவித்தார்.
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி குறைப்பு,அதானி நிறுவன முறைகேடுகளுக்கு பதில் தெரிவித்து விட்டு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்ட முத்தரசன், தொடர்ந்து சிபிஐ கட்சியின் சார்பில் மார்ச் 7ம் தேதி 100நாள் வேலை திட்டத்திற்கு நிதி குறைப்பு கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.