மத்திய அமைச்சர் வீட்டில் தாக்குதல் நடத்தியவர் கைது| Attacker arrested at central ministers house

திருவனந்தபுரம் : கேரளாவில், மத்திய இணை அமைச்சர் முரளீதரன் வீட்டில் தாக்குதல் நடத்திய மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய வெளியுறவு மற்றும் பார்லி., விவகாரத்துறை இணை அமைச்சரான முரளீதரன் வீட்டிற்குள், கடந்த வாரம் மர்ம நபர் ஒருவர் புகுந்து வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார்.

இந்த தாக்குதல் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த போலீசார், அப்பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டது கண்ணுாரைச் சேர்ந்த மனோஜ் என்பது தெரிய வந்ததை அடுத்து, நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.

மனோஜ் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்பட்ட நிலையில் அதற்கான மருத்துவ ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர்.மேலும், இவர் நகரின் பல ஹோட்டல்களில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட மனோஜிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.