வாஷிங்டன்: அமெரிக்க வான்வெளியில் மீண்டும் ஒரு மர்மப் பொருள் அந்நாட்டு ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. ஒரே வாரத்தில் இது 4வது சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி சீன உளவு பலூன் ஒன்று அமெரிக்க ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அந்த பலூன் தங்கள் நாட்டுடையதுதான் வானிலை ஆய்வுக்காக தனியார் நிறுவனம் அனுப்பியது திசை மாறி அமெரிக்க வான் எல்லைக்குள் வந்துவிட்டது என்று சீனா விளக்கமளித்தது. ஆனால் அதை ஏற்க மறுத்த அமெரிக்க அந்த உளவு பலூன் கடலின் மீது பறந்த போது சுட்டு வீழ்த்தியது. அதிபர் ஜோ பைடனின் உத்தரவின் பேரில் எஃப் 16 ரக போர் விமான மூலம் இந்த மர்மப் பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது.
தொடர்ந்து 11 ஆம் தேதி அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தின் மீது 40 ஆயிரம் அடி உயரத்தில் ஏதோ மர்ம பொருள் ஒன்று பறக்க அதனை அந்நாட்டு ராணுவம் ஜெட் விமானங்கள் மூலம் சுட்டு வீழ்த்தியது. கனடா நாட்டுடடான எல்லையை ஒட்டி யுகோன் மாகாணத்தின் அருகே அடுத்தடுத்த நாட்களில் 2 மர்மப் பொருட்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்நிலையில் நேற்று மீண்டும் ஒரு மர்மப் பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இந்த 4 மர்மப் பொருட்களிலும் முதன்முதலில் வீழ்த்தப்பட்ட சீன உளவு பலூன் தான் மிகப்பெரியது. இதற்கிடையில் கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ யுகோன் மாகாணத்தில் ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.