உக்ரைன் போர் துவங்கியதிலிருந்தே பிரித்தானியா மீது தாக்குதல் நடத்தவேண்டும் என்னும் குரல் புடின் ஆதரவாளர்களிடமிருந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
லண்டன் மீது தாக்குதல் நடத்துவதில் என்ன பிரச்சினை?
அவ்வகையில், புடின் ஆதரவாளர் ஒருவர், லண்டன் மீது ஏன் நாம் தாக்குதல் நடத்தக்கூடாது, அதில் என்ன பிரச்சினை என கேள்வி எழுப்பியுள்ளார்.
ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், புடின் ஆதரவாளரான Vladimir Solovyov என்பவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளதுடன், இமானுவல் மேக்ரான், ஓலாஃப் ஷோல்ஸ், ரிஷி சுனக் ஆகிய தலைவர்களையும் ஆபாச வார்த்தைகளால் மோசமாக விமர்சித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யப் போரில் பல நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு அளித்துவருவதுடன், ஆயுதங்கள் வழங்கவும் முன்வந்துள்ளதே ரஷ்யாவை ஆத்திரமடையவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Solovyev “bombs” London and British Parliament again. I’ve lost count already. pic.twitter.com/T6GN35UGtG
— Anton Gerashchenko (@Gerashchenko_en) February 12, 2023