குஜராத்: அதானி குழுமத்தை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் சந்தையில் மீண்டும் பெரும் சரிவைச் சந்தித்துள்ளன. இந்தியாவின் முன்னணி வர்த்தக குழுமமான அதானி குழுமம் சமீபத்தில் சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. குறிப்பாக அதானி குழுமத்தின் மீதான ஹிண்டர்ன்பர்க் அறிக்கையானது வந்த நிலையில், அதானி குழும பங்குகள் தரை தட்டின. எனினும் இந்த சரிவினை மீட்டு எடுக்க அதானி குழுமம் அதிரடியான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதனிடையே, அதானி குழும நிறுவன பங்குகள் மீண்டும் சரிய தொடங்கியுள்ளது.
அதன்படி, அதானி கிரீன் எனர்ஜி பங்கு ரூ.36 குறைந்து ரூ.688ஆகவும், அதானி பவர் பங்கு ரூ.8 குறைந்து ரூ.156ஆகவும் உள்ளன. அதானி டிரான்ஸ்மிஷன் பங்கு ரூ.59 குறைந்து ரூ.1.127.35ஆகவும் உள்ளன. அதானி டோட்டல் கேஸ் பங்கு ரூ.63 குறைந்து ரூ.1192.65 ஆகவும் உள்ளன. அதானி வில்மர் நிறுவனப் பங்கும் ரூ.21.80 குறைந்து ரூ.416.65ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. அதானி போர்ட்ஸ் பங்கு ரூ.8 குறைந்து ரூ.576ஆகவும், அதானி எண்டர்பிரைசஸ் பங்கு ரூ.30 குறைந்து ரூ.1,817ஆக உள்ளன.