இந்திய சந்தையில் நடைமுறைக்கு வரவுள்ள OBD-2, E20 உள்ளிட்ட அம்சங்களுடன் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டத்தை பெற்றுள்ள FZ-X, MT 15 V2 என இரு பைக் உட்பட FZ-S,FZ-S V4 மற்றும் R15M , R15 V4 என மொத்தமாக 6 பைக்குகள் இன்றைக்கு விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து யமஹா பைக்குகளிலும் இழுவை கட்டுப்பாட்டு அமைப்பு (Traction Control System – TCS) சேர்க்கப்பட்டு இதற்காக பிரத்யேக மின்னணு அமைப்பின் மூலம் வீல் ஸ்பின் ஆகி சாலைகளில் ஏற்படும் டிராக்ஷன் இழப்பினை ஈடுகட்டி வாகனம் நிலை தடுமாறுவதனை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
2023 யமஹா FZ-X, MT 15 V2
ரெட்ரோ ஸ்டைலை பெற்றுள்ள யமஹா FZ-X பைக்கில் ஏர் கூல்டு 149cc என்ஜின் SOHC, 2 வால்வுகளை கொண்டு அதிகபட்சமாக 12.4PS பவரை 7,250 rpm-ல் வழங்கும் நிலையில் 5,500 rpm-ல் 13.3 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. புதிய OBD-2 மற்றும் E20 எரிபொருள் பயன்படுத்தும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.
யமஹா FZ-X விலை ரூ.1,37,639 (காப்பர், பிளாக்) மற்றும் ரூ.1,38,639 (ப்ளூ)
2023 யமஹா MT-15 Ver 2.0
டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றுள்ள MT-15 Ver 2.0 பைக்கில் 155சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்யூடு-கூல்டு VVA என்ஜின் அதிகபட்சமாக 18.1bhp மற்றும் 14.2Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் USD ஃபோர்க்குகள் மற்றும் மோனோஷாக் ஆகியவற்றை பெற்றுள்ளது.
புதிய MT-15 Ver 2.0 பைக் விலை ரூ. 1,69,939
(அனைத்தும் தமிழ்நாடு எக்ஸ்ஷோரூம் விலை)