ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா கடந்த டிசம்பர் 4ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து வரும் பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனிடையே இடைத்தேர்தலுக்கான வேட்புனு தாக்கல் மற்றும் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் மற்றும் சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் அலுவலர் சிவகுமார் வெளியிட்டுருந்தார்.
அதன் அடிப்படையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 75 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனையடுத்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையொட்டி வாக்கு நடைபெறும் நாளான பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவனங்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.