Chat GPT மூலமாக Google நிறுவனத்தை அலறவிடப்போறோம்! சவால் விடும் சத்யா நாடெல்லா!

தேடலில் புதுவிதமான அனுபவம் மற்றும் புரட்சி ஏற்படுத்தும் வகையில் Microsoft நிறுவனம் OpenAI Chat GPT உடன் இணைக்கப்பட்ட அதன் AI Bing தேடல் கருவியை விரைவில் வெளியிடவுள்ளது. இதனை அந்த நிறுவனத்தின் Edge Browser உடன் இணைத்து புதுவிதமாக தேடலை அணுகப்போவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ChatGPT மூலமாக 20 ஆண்டுகால
Google Search ஆதிக்கத்திற்கு ஒரு முடிவு
கிடைக்கும் என்று Microsoft கருதுகிறது. அதன் கூற்றுப்படி ஒரு நாளைக்கு சுமார் 10 பில்லியன் தேடல் உலகம் முழுவதும் நடக்கிறது ஆனால் அதில் பாதி தேடல்களுக்கு மட்டுமே சரியான விடை அளிக்கப்படுகிறது.

மீதம் இருப்பவை அப்படியே விடை இல்லாமல் இருக்கின்றன. இதற்கு சிறந்த தேர்வாக இந்த AI Bing செயலி இருக்கும் என்றும் இதன் மூலமாக நாம் இனி சுலபமான தேடல்களை மேற்கொண்டு அனைத்தையும் தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

AI Bing மற்றும் Edge Browser பயன்கள்

சிறப்பான தேடல் அனுபவம்:
புதிய Bing உங்களுக்கு முன்பு இல்லாத வகையில் சிறந்த தேடல் அனுபவம் தரும். மேலும் நமக்கு உடனடியாக தேவைப்படும் விளையாட்டு போட்டிகள் பற்றிய புள்ளி விவரம், பங்கு சந்தை மதிப்பு, வானிலை போன்றவை தனியாக ஒரு பக்கத்தில் அப்டேட் உடன் இருக்கும்.

முழுமையான விடை:
எந்த ஒரு தேடலுக்கும் நமக்கு முழுமையாக விடை கிடைக்கும். ஒரே தேடலில் நாம் அனைத்தையும் தெரிந்துகொள்ளலாம்.

புதிய Chat வசதி:
சில கடினமான தேடல்களுக்கு Chat வசதி நமக்கு உதவும். இதன் மூலமாக நமக்கு சில கடினமான தேடல் பற்றிய விவரங்களை Bing நம்முடன் Chat செய்து பின்னர் வழங்கும்.

அறிவுபூர்வமான பதில்கள்:
சில கேள்விகளுக்கு நமக்கு பல விடைகள் தேவைப்படும். உதாரணமாக நமக்கு இமெயில் எழுதவோ, சுற்றுலா செல்ல திட்டம் ஒன்றை உருவாக்கவும், புத்தகங்கள் வாங்க வேண்டும் என்றால் இந்த Bing AI உதவி செய்து நமக்கு அனைத்து லிங்க் விவரங்களும் தரும்.

புதிய Edge Browser:
இந்த புதிய அப்டேட் மூலமாக நமக்கு Chat மற்றும் Compose என இரு புதிய ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. இதனால் நமக்கு வேண்டிய விவரங்களை Chat செய்து பெற்று பின்னர் AI மூலமாக விவரங்களை தானாகவே Compose செய்து பதிவேற்றம் செய்யலாம்.

Microsoft மற்றும் OpenAI இணைப்பு

OpenAI நிறுவனத்துடன் இணைந்து Microsoft நிறுவனம் இந்த
ChatGPT
உருவாக்கியுள்ளது. மேலும் இது நமக்கு உண்மையான செய்திகள் எது? மற்றும் போலியான ஆபத்தான செய்திகள் எது? என்பதை தானே ஆராய்ந்து சரியான உண்மையான விவரங்களை மட்டுமே காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக இனி ஆராய்ச்சிகள் மற்றும் தேடல்கள் செய்தால் தவறுகள் இல்லாமல் நடக்கும்.

எப்போ வெளியாகும்?

இது தற்போது குறிப்பிட்ட சில Desktop கருவிகளில் மட்டும் இடம்பெற்றுள்ளது. இதன் சோதனை மாதிரி மக்கள் பயன்படுத்தி பார்ப்பதற்கு Bing.com செல்லவேண்டும். விரைவில் அனைத்து Edge Browser கருவிகளிலும் இந்த AI Bing வேலை செய்யும். இதற்காக உருவாக்கப்பட்டுவரும் மொபைல் ஆப் ஒன்று விரைவில் வெளியாகவுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.