சென்னை: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் 40 ஆயிரம் போலி வாக்காளர்கள் இடம்பெற்றிருப்பதாக தலைமை தேர்தல் ஆணையத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதி காலியான தாக அறிவிக்கப்பட்டு, இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அங்கு ஜனவரி 31முதல் வேட்புமத்தாக்கல் நடைபெற்ற பிப்ரவரி 6ந்தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து பிப்ரவரி […]