வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லி, மும்பையில் உள்ள பிபிசி செய்தி நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பிரிட்டனை சேர்ந்த பி.பி.சி., நிறுவனம், 2002ல் நடந்த குஜராத் கலவரம் பற்றிய ஆவணப்படத்தை தயாரித்து வெளியிட்டது. இதில், அப்போது குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் நரேந்திர மோடியை தொடர்புப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த ஆவணப்படத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் டில்லியில் உள்ள பிபிசி செய்தி நிறுவன அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காலை 11:30 மணி முதல் சோதனை நடப்பதாக கூறப்படுகிறது.
இதனால், ஊழியர்கள் அனைவரின் செல்போன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அனைவருக்கும் விடுப்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து மும்பையில் உள்ள பிபிசி அலுவலகத்திலும் சோதனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement