ஜேர்மனியில் உள்ள பிரித்தானிய தூதரகத்தில் பணியாற்றிய பிரித்தானியர் ஒருவர், பிரித்தானியா மீது கொண்டிருந்த வெறுப்பு காரணமாக ரஷ்யாவுக்காக உளவு பார்த்தது தெரியவந்துள்ளது.
உளவு வேலையை எளிதாக்கிய தூதரகப் பணி
ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த டேவிட் (David Ballantyne Smith, 58), ஜேர்மனியிலுள்ள பிரித்தானிய தூதரகத்தில் பாதுகாவலராகப் பணியாற்றிவந்துள்ளார்.
பிரித்தானிய தூதரகத்தில் பாதுகாவலராகப் பணியாற்றிய டேவிட், அதே ஜேர்மனியிலுள்ள ரஷ்ய தூதரகத்தில் பணியாற்றும் இராணுவ அதிகாரி ஒருவருக்கு அனுப்பிய கடிதம் ஒன்று தற்செயலாக அதிகாரிகளிடம் சிக்கியுள்ளது.
அதில் பிரித்தானிய தூதரகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் குறித்த விவரங்கள், புகைப்படங்கள் மற்றும் பல ஆவணங்கள் இருந்தது தெரியவரவே, டேவிட் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சோதனையில் சிக்கிய ஆவணங்கள்
பிரித்தானியாவுக்கு உதவும் ஒரு ரஷ்ய நாட்டவர் போல் ஒருவரை களமிறக்கிய அதிகாரிகள் இரகசியமாக டேவிடை உளவு பார்க்க, டேவிட் ரஷ்யாவுக்கு உளவு பார்க்க காட்டிய ஆர்வம் குறித்து தெரியவந்துள்ளது.
அதைத்தொடர்ந்து ஜேர்மன் பொலிசார் டேவிடைக் கைது செய்துள்ளனர்.
அவர் வீட்டை சோதனையிடும்போது, அவர் பல ஆண்டுகளாக தூதரகத்திலிருந்து பல முக்கிய ஆவணங்களை சேகரித்தது தெரியவந்தது. அவற்றில் ஒன்று லிஸ் ட்ரஸ் முதலானவர்கள் அப்போதைய பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எழுதிய ஒரு கடிதம்.