புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை இந்தியர்களாகிய நாம் அனுசரித்து வருகிறோம். இன்று துணிச்சலான வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்வதற்கான நேரமாகும். இந்தியாவில் நடந்த மிகக் கொடிய பயங்கரவாதத் தாக்குதல்களில் ஒன்றாக கருதப்படும் புல்வாமா தாக்குதலின் நினைவு நாள் இன்று. பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் 40 மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர்கள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
22 வயது அடில் அஹ்மத் தார், ஒரு மாருதி ஈகோ வண்டியை நெடுஞ்சாலையில் ஓட்டிச் சென்று, ஐஇடி ஏற்றப்பட்ட அந்த வாகனத்தை சிஆர்பிஎஃப் கான்வாய் மீது மோதச் செய்தார். பேருந்து வெடித்து உருக்குலைந்த உலோகக் குவியலாக மாறிது. இதில் 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். கடந்த மூன்று தசாப்தங்களில் காஷ்மீர் பள்ளத்தாக்கு கண்ட மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் இதுவாகும்.
புல்வாமா தாக்குதலின் முழு விவரம் இதோ:
பிப்ரவரி 14, 2019
சிஆர்பிஎஃப் பேருந்தை குறிவைத்து 22 வயதுடைய தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 2500 துணை ராணுவப் படையினர் மற்றும் 78 வாகனங்களுடன் ஜம்முவில் இருந்து NH44 இல் ஸ்ரீநகர் நோக்கிச் சென்ற ஒரு பெரிய கான்வாயின் ஒரு பகுதியாக இந்த பேருந்து இருந்தது.
தற்கொலை தாக்குதல் நடத்தியவர் ஜெய்ஷ்-இ-முகமதுவின் அடில் அகமது தர் என அடையாளம் காணப்பட்டார். அவர் தெற்கு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் உள்ள காகபோராவைச் சேர்ந்த உள்ளூர் காஷ்மீரி ஜிகாதி ஆவார்.
இந்த குண்டுவெடிப்பு பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையது. இந்த கொடிய தாக்குதலுக்கு உரிமை கோரும் சிறு காணொளியை JeM வெளியிட்டது.
பிப்ரவரி 15, 2019: புல்வாமா தாக்குதல் குறித்து பிரதமர் மோடி அறிக்கை வெளியிட்டார்
புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். புல்வாமா தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் மோடி கூறினார். தீவிரவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கு உதவி செய்பவர்கள், பெரிய தவறு செய்து விட்டதாகவும், அதற்கு பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்தார். பாதுகாப்புப் படைகளுக்குச் செயல்பட சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறிய பிரதமர், இந்தியாவை சீர்குலைக்க முடியும் என்ற மாயையில் பாகிஸ்தான் வாழ வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தார்.
பிப்ரவரி 16, 2019: அனைத்துக் கட்சிகளும் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தன
புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்ததோடு, அரசுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளன
புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் இந்தியா முறித்துக் கொண்டது.
பணமோசடிக்கான நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்) பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் இந்திய அரசு கோரியது.
பிப்ரவரி 17, 2019: இறந்தவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது
புல்வாமாவில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) உறுப்பினர்களின் உறவினர் (NK) மற்றும் குடும்பங்களுக்கு பின்வரும் இழப்பீடு மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டன. மத்திய கருணைத்தொகை மொத்த இழப்பீடாக 35 லட்சமும், கடமை நிலையிலிருந்து கருணைத் தொகையாக 5 லட்சமும், சிஆர்பிஎப்பின் இடர் நிதியாக 20 லட்சமும், சிஆர்பிஎப்பின் மத்திய நல நிதியாக 1.5 லட்சமும், பாரத ஸ்டேட் வங்கியின் துணை ராணுவ சம்பள தொகுப்பு (PMSP) பாதுகாப்பாக 30 லட்சமும் வழங்கப்பட்டன.
பிப்ரவரி 26, 2019: இந்திய விமானப்படை பாலகோட் பயங்கரவாத முகாம்களை அழித்தது
பாகிஸ்தானின் பாலகோட் பகுதிக்குள் நுழைந்த இந்திய விமானப்படை வான்வழித் தாக்குதல் மூலம் தீவிரவாத முகாம்களை அழித்தது.
பிப்ரவரி 27, 2019: பாகிஸ்தான் விமானப்படை பதிலடி கொடுத்தது
இந்திய வான்வழித் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுத்தது. ஆனால் இந்திய விமானப்படை தயாராக இருந்தது. இருப்பினும், பயிற்சியின் போது, இந்திய மிக்-21 போர் விமானம் பாகிஸ்தானில் மோதி விழுந்து நொறுங்கியது. மிக்-21 விமானி அபிநந்தன் வர்தமானை பாகிஸ்தான் கைப்பற்றியது.
பிப்ரவரி 28, 2019: பிடிபட்ட IAF பைலட் அபிநந்தனை விடுவிப்பதாக பாகிஸ்தான் கூறியது
இந்தியா, சவூதி அரேபியா, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் அழுத்தத்தின் காரணமாக, பிடிபட்ட இந்திய விமானப்படை விமானி விங் கமாண்டர் அபிநந்தன் மார்ச் 1 ஆம் தேதி விடுவிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார்.
மார்ச் 1, 2019: IAF பைலட், விங் கமாண்டர் அபிநந்தன் விடுதலை
இந்திய விமானப்படையின் விமானி விங் கமாண்டர் அபிநந்தன் மார்ச் 1ஆம் தேதி விடுவிக்கப்பட்டார்.