மகளிர் உலகக் கிண்ண ரி 20 கிரிக்கெட் தொடர் போட்டி, பங்களாதேஷ், அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் இன்று (14) நடைபெறுகிறது.
இதேவேளை நேற்று (13) நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 18.2 ஓவர்களில் 105 ஓட்டங்கள் பெற்றது.
இதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 14.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 107 ஓட்டங்கள் பெற்று 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணிக்கு இது 2ஆவது வெற்றியாகும். ஏற்கனவே மேற்கிந்திய தீவுகள் அணியை வெற்றிருந்தது.
இதேவேளை நேற்று (13) நடைபெற்ற மற்றொரு போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க மகளிர் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 132 ஓட்டங்கள் பெற்றது.
இதையடுத்து, 133 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 18.1 ஓவரில் 67 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இதன்மூலம் தென்னாப்பிரிக்க அணி 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.