மேற்கத்திய நாட்டவர்கள் உடனடியாக ரஷ்யாவைவிட்டு வெளியேறுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்கக் குடிமக்களுக்கு எச்சரிக்கை
மாஸ்கோவிலுள்ள அமெரிக்க தூதரகம், ரஷ்யாவில் வாழும் மற்றும் ரஷ்யாவுக்குள் பயணித்துக்கொண்டிருக்கும் அமெரிக்கக் குடிமக்கள், உடனடியாக ரஷ்யாவைவிட்டு வெளியேறுமாறு எச்சரித்துள்ளது.
அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யாவில் அமெரிக்கர்கள் வேண்டுமென்றே தவறுதலாகக் கைது செய்யப்பட்டுக் காவலில் அடைக்கப்படும் அபாயம் உள்ளதால், கவனமாக இருக்குமாறும், ரஷ்யாவுக்குப் பயணிக்கவேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
நேட்டோ அமைப்பின் எச்சரிக்கை
இதற்கிடையில், புடின் உக்ரைனில் புதிய தாக்குதல் ஒன்றைத் துவக்கியிருக்கக்கூடும் என நேட்டோ அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள்.
நேட்டோ அமைப்பின் செக்ரட்டரி ஜெனரல் என்னும் பொறுப்பிலிருக்கும் Jens Stoltenberg, உண்மை நிலவரம் என்னவென்றால், புதிய ரஷ்ய தாக்குதல் ஏற்கனவே துவங்கிவிட்டதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.