இராமநாதபுரம்: இராமநாதபுரத்தில் விபத்தில் சிக்கியவரை ஏற்றி செல்ல ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வர மறுத்ததாகவும் அரசு மருத்துவமனையிலும் உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை எனவும் புகார் எழுந்துள்ளது. தெற்கு பெருவேளை சேர்ந்த மேகநாதன் என்ற இளைஞர் தேவி பட்டினத்திலிருந்து ராமநாதபுரம் நோக்கி இருசக்கரவாகனத்தில் சென்ற போது விபத்தில் சிக்கினார்.
இதில் அவரது வலது கைவிரல் துண்டிக்கப்பட்டு படுகாயமடைந்து சாலையில் மயங்கி கிடந்தார். அப்பகுதி மக்கள் 108 அவசர சிகிக்சை ஊர்தி சேவைக்கு பலமுறை தொடர்பு கொண்டும் ஆம்புலன்ஸ் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த இளைஞரை இருசக்கர வாகனத்தில் அமரவைத்து அப்பகுதியினரே ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்ததாக தெரிகிறது.