Ajith, Valentines day: கத்தி, ரத்தம், அமைதி: ஷாலினி மீது அஜித்துக்கு இப்படித் தான் காதல் வந்தது

Valentines day celebration:உலக காதலர்கள் காதலை கொண்டாடும் நாளில் அஜித், ஷாலினியின் காதல் கதை பற்றி சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.

அமர்க்களம்அஜித் குமாரும், ஷாலினியின் சேர்ந்து நடித்த அமர்க்களம் படம் சூப்பர் ஹிட்டானது. அந்த படத்தில் முரட்டு ஆசாமியாக நடித்திருந்தார் அஜித். ஒரு காட்சியில் கத்தியை காட்டி ஷாலினியை மிரட்ட வேண்டும் என்று அஜித்திடம் இயக்குநர் சொல்லியிருக்கிறார். ஆனால் அஜித் தெரியாத்தனமாக ஷாலினியின் கையில் கத்தியை வைத்துவிட்டார். இதில் ஷாலினியின் கையில் இருந்து ரத்தம் வரத் துவங்கிவிட்டது.

​காதலர் தினம் 2023, Rajinikanth:காதலியே மனைவியாக பெற்ற பாக்கியசாலிகள் ரஜினி, அஜித், சூர்யா, விஜய்

ஷாலினிஒரு துளி ரத்தம் வந்தாலே மம்மி, ரத்தம் என ஹீரோயின்கள் கத்திக் கதறுவது போன்று படங்களில் காட்டியிருப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் ஷாலினியின் கையில் ரத்தத்தை பார்த்து அஜித் உள்பட அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். ஆனால் ஷாலினியோ கூலாக இருந்தார், தெரியாமல் கத்திபட்டுவிட்டது பரவாயில்லை என்று சாதாரணமாக கூறியிருக்கிறார்.

காதல்இந்த சின்ன பெண்ணுக்கு இந்த அளவுக்கு பொறுமையும், மெச்சூரிட்டியுமா என அஜித் இம்பிரஸ்ஸாகிவிட்டார். அப்பொழுது தான் ஷாலினி மீது அஜித்துக்கு காதல் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அஜித் தன் காதலை ஷாலினியிடம் கூற அவரும் ஓகே சொல்லிவிட்டார். தங்களின் காதலை இருவீட்டிலும் சொல்லி பெற்றோர் ஆசியுடன் திருமணம் செய்து கொண்டார்கள்.
பிள்ளைகள்கடந்த 2000ம் ஆண்டு அஜித், ஷாலினியின் திருமணம் நடந்தது. அவர்களுக்கு அனௌஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் இருக்கிறார்கள். ஆத்விக் அச்சு அசலாக அஜித் போன்றே இருக்கிறார். அம்மா ஷாலினியை விட உயரமாக உள்ளார் அனௌஷ்கா. அவர் தன் அம்மா வழியில் நடிக்க வருவாரா, இல்லையா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நடிப்புஅஜித் குமாரை திருமணம் செய்து கொண்ட பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார் ஷாலினி. குடும்பத்தை பார்த்துக் கொண்டு வீட்டோடு இருக்கிறார். அவர் ஒரு ஃபிட்னஸ் ஃப்ரீக் ஆவார். மேலும் பேட்மிண்டனில் ஷாலினிக்கு ஈடுபாடு அதிகம் என்பதை புரிந்து கொண்ட அஜித், அவரை போட்டிகளில் கலந்து கொள்ள வைத்தார். இரண்டு குழந்தைகள் என்றான பிறகு ஷாலினி வீட்டை மட்டும் கவனித்துக் கொண்டிருக்கிறார்.
மாற்றம்ஆங்ரி யங்மேனாக இருந்த அஜித் குமாரை சாந்தமாக்கியதே ஷாலினி தான் என்கிறார்கள் ரசிகர்கள். தி ஃபேமிலி மேன் என பெயர் வாங்கியிருக்கிறார் அஜித். கெரியரை பொறுத்தவரை ஏ.கே. 62 படத்தில் நடிக்கவிருக்கிறார். இயக்குநர் விக்னேஷ் சிவனை கடைசி நேரத்தில் மாற்றிவிட்டதால் படப்பிடிப்பை திட்டமிட்டபடி துவங்க முடியாமல் போய்விட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.