Indian Railways: ரயிலில் வெறும் சைவ உணவுகள்..பயணிகளுக்கு ஜாக்பாட்

இந்திய ரயில்வே வசதி: நீங்கள் சைவ உணவு உண்பவர் மற்றும் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக ரயில் பயணத்தின் போது, பாயணிகளுக்கு ​​சாத்வீக உணவு உண்பதில் பிரச்னையாக இருக்கிறது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரயில்வே தொடங்கிய வசதியால் இந்த பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது. ஆம், இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ரயில் பயணிகள் தங்களின் பயணத்தின் போது முற்றிலும் சாத்வீக உணவைப் பெற முடியும். உண்மையில், இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான IRCTC, இஸ்கான் கோவிலின் கோவிந்தா உணவகத்துடன் இணைந்துள்ளது. தற்போது சாத்வீக உணவை சாப்பிட விரும்பும் பயணிகள் இஸ்கான் கோவிலின் கோவிந்தா என்ற உணவகத்தில் உணவை ஆர்டர் செய்துக் கொள்ளலாம்.

ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் இருந்து இந்த வசதி தொடங்கும்
இந்த நிலையில் இஸ்கான் மற்றும் ஐஆர்சிடிசி இடையேயான ஒப்பந்தத்தின் கீழ், இந்த வசதி டெல்லியின் ஹஸ்ரத் நிஜாமுதீன் நிலையத்தில் இருந்து தொடங்கப்பட்டது. வரும் காலங்களில், பல்வேறு மண்டலங்களிலும் இந்த ரயில் வசதி தொடங்கப்படும். அந்த வாய்யில் பயணிகள் நீண்ட பயணங்களின் போது உணவு உண்பதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். அதிலும் வெங்காயம், பூண்டு கூட சிலர் சாப்பிட விரும்புவதில்லை. சிலர் பேண்ட்ரி காரில் இருந்து பெறும் உணவின் தூய்மையை சந்தேகிக்கிறார்கள் மேலும் அதை சாப்பிடுவதைத் தவிர்க்கிறார்கள். ஆனால் இப்போது அத்தகைய பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பை ரயில்வே வெளியிட்டுள்ளது.

இந்த உணவகத்தில் உணவு சாப்பிடலாம்
எனவே நீண்ட தூரம் செல்லும்
ரயில்களில் உணவுக்காக பயணிகள் அதிக சிரமங்களை எதிர்கொள்ளாமல் இருக்க, பயணிகளின் பிரச்சனைகளுக்கு முடிவு கட்ட, இந்த சிறப்பு நடவடிக்கையை ஐஆர்சிடிசி எடுத்துள்ளது. அதன்படி இனி ரயிலில் பயணிப்பவர்கள் கோவிந்தா உணவகத்தில் உணவு ஆர்டர் செய்துக்கொள்ளலாம்.

உணவில் என்னென்ன கிடைக்கும்?
மத யாத்திரை செல்லும் மக்களை மனதில் வைத்து இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளதாக ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது. முதல்கட்டமாக நல்ல வரவேற்பு கிடைத்தால் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். மேலும் உணவு மெனுவில் டீலக்ஸ் தாலி, மகாராஜா தாலி, வெஜ் பிரியாணி, பனீர் உணவுகள், நூடுல்ஸ், தால் மக்கானி உள்ளிட்ட பல சாத்வீக உணவுகள் கிடைக்கும்.

சேவையை எவ்வாறு பெறுவது
இந்தச் சேவையைப் பயன்படுத்தி, பயணத்தின் போது சாத்வீக உணவைப் பெற விரும்பினால், நீங்கள் IRCTC இ-கேட்டரிங் இணையதளம் அல்லது Food on Track செயலியில் முன்பதிவு செய்யலாம். ரயில் புறப்படுவதற்கு குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக பயணிகள் PNR எண்ணுடன் ஆர்டர் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு சாத்வீக உணவு உங்கள் இருக்கையை வந்தடையும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.