இராணுவப் பண்ணைகளில் மரக்கறிகள் ,நெல் அறுவடை

இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் நாடு முழுவதும் உள்ள இராணுவப் விவசாய பண்ணைகளில் அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் பல மாதங்களுக்கு முன்னர் அந்தந்தப் பண்ணைகளில் பயிரிடப்பட்ட பெரும்போக நெல் அறுவடை மற்றும் பருவகால மரக்கறிகளை அறுவடைசெய்யும் பணியில் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

 அதற்கமைய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களால் நிறுவப்பட்ட பசுமை விவசாய வழிநடத்தல் குழுவுடன் இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணியின் படையினர், பாங்கொல்ல, தயாகம, ரிதியகம, மெனிக்பார்ம், வீரவில மற்றும் இரணைமடு ஆகிய இராணுவப் விவசாயப்பண்ணைகளில் கடந்த சில நாட்களாக நெல் மற்றும் மரக்கறிகளை அறுவடை செய்தனர். இன்றுவரை இராணுவப் பண்ணைகளில் இருந்து 120.3 மெற்றிக் தொன் நெல்லினை படையினர் அறுவடை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
2021 ஜனவரி 4 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக நிறுவப்பட்ட இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணியானது தற்போது நாடு முழுவதிலும் உள்ள 19 இராணுவ விவசாயப்பண்ணைகளை நிர்வகித்து வருகின்றது. மேலும் அவை விவசாயம் மற்றும் கால்நடைகள் பணிப்பகத்தின் மேற்பார்வையில் இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணியின் படைத்தளபதியும் இராணுவ நிதி முகாமைத்துவ பணிப்பாளருமான மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர மற்றும் இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் அரோஷ ராஜபக்ஷ ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணியில் ஏற்கனவே உள்நாட்டு மற்றும் பொது நெல்வகைகள், கரட், பூசணி, கத்தரி, சோளம், முள்ளங்கி போன்றவற்றை பயிரிடத் தொடங்கியுள்ளது, மேலும் பால் பொருட்கள், கோழி மற்றும் முட்டைகள் பெருமளவில் இராணுவ வீரர்களுக்கும் பொது மக்களுக்கும் மானிய விலையில் விற்கப்படுகின்றன.
 
பாதுகாப்பு அமைச்சு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.