மூணாறு,மூணாறை சுற்றி நேற்று பல்வேறு பகுதிகளில் காட்டுத் தீ பரவியதால், நகர் புகை மண்டலமாக காட்சியளித்தது.
கேரள மாநிலம், மூணாறில், கோடைக் காலம் நெருங்குவதால் காடுகள், புல் மேடுகள் கருக துவங்கியுள்ளன. அதனால் பல பகுதிகளில் காட்டு தீ பரவி வருகிறது.
மூணாறு அருகே பள்ளிவாசல் எஸ்டேட் பகுதியில் காடு, மலை ஆகியவற்றில் நேற்று காலை பரவிய காட்டுத் தீயால் ஏக்கர் கணக்கில் புல் மேடுகளும், மரங்களும் எரிந்தன.
அப்பகுதியிலிருந்து கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை வரை தீ பரவியதால், மூணாறு தீயணைப்பு துறையினர் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.
பிறகு மதியம் 2:30 மணிக்கு, மாட்டுப்பட்டி ரோட்டில் வனத்துறை பூந்தோட்டம் அருகே புல்மேடுகளில் தீப்பற்றியது. தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். மூணாறை சுற்றி பரவிய காட்டுத் தீயால் நகர் புகை மண்டலமானது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement