திருப்பூர்: மங்களூரில் நடந்த குக்கர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக திருப்பூரில் இருவரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மங்களூரில் கடந்த நவ.19ல் குக்கர் குண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பூர் ராமு காலனியில் முகமது ரிஸ்வான்40, காங்கேயம் சிக்கந்தர் பாட்சா 42 வீடுகளில் என்.ஐ.ஏ. விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
